நடிகர் அமிதாப் பச்சனின் 'டுவிட்டர்' ஹேக் செய்யப்பட்டுள்ளது

நடிகர் அமிதாப் பச்சனின் 'டுவிட்டரை' ஹேக்கர்கள் கைப்பற்றி உள்ளனர்.
நடிகர் அமிதாப் பச்சனின் 'டுவிட்டர்' ஹேக் செய்யப்பட்டுள்ளது
Published on

புதுடெல்லி,

அமிதாப் பச்சன், பிக் பி என அழைக்கப்படும் பிரபலமான நடிகர். டுவிட்டரில் இவரை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.

மேலும் இவர் இந்திய அளவில் மிக அதிக அளவு ரசிகர்களை வைத்துள்ள பிரபலம். இவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை 3.74 கோடி பேர் பின்பற்றி வருகிறார்கள். நரேந்திர மோடி மற்றும் ஷாருக்கான் ஆகியோருக்கு அடுத்து அமிதாப் பச்சன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் அமிதாப் பச்சனின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். அதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகைப்படத்தை புரோபைல் படமாக வைத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல பதிவுகள் அதில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com