நாட்டில் 22.17 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள் கூடுதலாக ஒதுக்கீடு

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் வரும் 30ந்தேதி வரைக்கும் கூடுதலாக 22.17 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
நாட்டில் 22.17 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள் கூடுதலாக ஒதுக்கீடு
Published on

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்துகளை மத்திய அரசு கூடுதலாக ஒதுக்கீடு செய்து அறிவித்து உள்ளது.

இதுபற்றி மத்திய ரசாயனம் மற்றும் உர துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மே 23ந்தேதி வரை 76.70 லட்சம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்துகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், மே 23ந்தேதி முதல் மே 30ந்தேதி வரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கூடுதலாக 22.17 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள் ஒதுக்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

இதனால் நாடு முழுவதும் மொத்தம் 98.87 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள் இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com