துபாயில் திறக்கப்பட்ட இந்து கோவிலின் வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மகேந்திரா- வைரலாகும் பதிவு

ஆனந்த் மகேந்திரா பகிர்ந்துள்ள வீடியோவில் கோவிலில் உள்ள கடவுளின் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
துபாயில் திறக்கப்பட்ட இந்து கோவிலின் வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மகேந்திரா- வைரலாகும் பதிவு
Published on

துபாய்,

துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட இந்து கோவில் நேற்று திறக்கப்பட்டது. இக்கோவில், ஏற்கனவே உள்ள சிந்திகுரு தர்பார் கோவிலின் விரிவாக்கம் ஆகும். இக்கோவில் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா இந்த கோவிலின் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் கோவிலில் உள்ள ஒவ்வொரு கடவுளின் சிலையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விநாயகர், சிவபெருமான், அனுமன் உள்ளிட்ட பல கடவுள்களின் சிலையும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோவை பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், "இந்த அற்புதமான கோவில் இன்று முறைப்படி திறக்கப்பட்டது என்று நான் நம்புகிறேன். சுப நேரம். எனது அடுத்த துபாய் பயணத்தின் போது நிச்சயமாக இந்த கோவிலை பார்வையிடுவேன் என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com