முதல்-மந்திரி குறித்து அவதூறு: ஆந்திராவில் 39 பேர் கைது

தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை ஆளும் கட்சி நிறைவேற்றவில்லை என்று ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டி உள்ளார்.
முதல்-மந்திரி குறித்து அவதூறு: ஆந்திராவில் 39 பேர் கைது
Published on

ஐதராபாத்,

ஆந்திராவில், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - ஜனசேனா - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து, சமூக வலைதளங்களில் அவதுறு கருத்துகள் அதிகளவில் வெளியாகி வருகின்றன.

துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் மற்றும் அவரது மகள்கள் குறித்தும், மாநில காங்., தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா குறித்தும் இதில் விமர்சனங்கள் இடம்பெற்றதை அடுத்து, அது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சி ஆதரவாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, முதல்-மந்திரி உள்ளிட்டோர் தொடர்பாக அவதுறு கருத்துகளை வெளியிட்ட சமூக வலைதளங்களுக்கு விளக்கம் கேட்டு, இதுவரை 67 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. மொத்தம், 100 வழக்குகள் பதிவு செய்துள்ள போலீசார், 39 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில்,

தேர்தல் பிரசாரத்தின் போது வழங்கிய வாக்குறுதிகளை தெலுங்கு தேசம் கட்சி இதுவரை நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றிய இந்த அரசு மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை? இது குறித்து கேள்வி எழுப்பினால் கைது செய்வோம் என மிரட்டுகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சி ஆதரவாளர்கள், 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com