அதிகாரி கொடுத்த பூங்கொத்தை தூக்கி வீசிய மந்திரி - வைரல் வீடியோ

ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மந்திரி சுவிதா.
அதிகாரி கொடுத்த பூங்கொத்தை தூக்கி வீசிய மந்திரி - வைரல் வீடியோ
Published on

அமராவதி,

ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மந்திரி சுவிதா. இவர் அம்மாநிலத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் கடந்த 6ம் தேதி நடந்த ஓய்வூதிய விநியோக திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது, பென்கொண்டா தாசில்தாரிடம் அப்பகுதியில் உள்ள பயனாளர்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்டது தொடர்பான விவரத்தை மந்திரி சுவிதா கேட்டுள்ளார். அப்போது, மந்திரியின் அந்த கேள்விக்கு தாசில்தாரால் பதில் அளிக்கமுடியவில்லை.

அப்போது திடீரென மற்றொரு அதிகாரி, மந்திரி சுவிதாவுக்கு பூங்கொத்து கொடுத்தார். இலவச கியாஸ் சிலிண்டர் தொடர்பான கேள்விக்கு தாசில்தார் பதில் அளிக்காததால் கோபத்தில் இருந்த மந்திரி பூங்கொத்தை தூக்கி வீசினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com