

அமராவதி
ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் கல்யாண்துர்க் நகரில் இருந்து ராயதுர்க் நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கார் ஒன்றும் அந்த வழியே வந்து கொண்டிருந்தது. கூபனப்பள்ளி பகுதியருகே வந்தபோது, காரும், பஸ்சும் மோதி விபத்தில் சிக்கின.
இந்த மோதலில் காரில் இருந்த 3 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள். இதுபற்றி கல்யாண்துர்க் டி.எஸ்.பி. ரவி பாபு கூறும்போது, விபத்தில் கார் உருக்குலைந்து போயுள்ளது. 3 பேரின் உடல்களை அதிக முயற்சிக்கு பின்னர் வெளியே எடுத்து வந்தோம் என கூறினார்.
இந்த சம்பவத்தில் சிக்கி பலியான 3 பேரும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என கூறியுள்ளார். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.