உறவினர் கிண்டல் செய்ததால் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த சிறுவன்


உறவினர் கிண்டல் செய்ததால் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த சிறுவன்
x

அந்த பஸ்சின் டிரைவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை புறநகர் மாவட்டம் பந்தன்அப் பகுதியில் உள்ள டேங் ரோடு பகுதியில் உள்ள சாலையில் நேற்று மாலை அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது.

அப்போது அந்த பஸ்சை இடைமறித்த 16 வயது சிறுவன் தான் வைத்திருந்த வாளால் பஸ்சின் கண்ணாடியை உடைத்தார். பின்னர், அந்த பஸ்சின் டிரைவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவின் கண்ணாடியையும், அங்கிருந்த குடிநீர் தொட்டியையும் உடைத்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து வந்து சிறுவனை கைது செய்தனர். சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உறவினர் கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்ததாக தெரிவித்தார். இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார், கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

1 More update

Next Story