தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம்: திரும்ப பெறாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் - அன்னா ஹசாரே எச்சரிக்கை

மனுதாரர்கள் தங்களது அடையாள அட்டையை இணைப்பது கட்டாயம் என்று அரசு புதிய விதியை சேர்த்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம்: திரும்ப பெறாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் - அன்னா ஹசாரே எச்சரிக்கை
Published on

புனே,

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

மராட்டிய அரசு தகவல் அறியும் உரிமை சட்ட(ஆர்.டி.ஐ.) விதிகளில் சில புதிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இது 2005-ம் ஆண்டு கொண் டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நோக்கத்திற்கே எதிரானது. ஆர்.டி.ஐ. என்பது அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் சட்டம் அல்ல. 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இதற்கான கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. கட்டணத்தை உயர்த்தும் அரசு, தவறான தகவல்களை தரும் அதிகாரிகள் மீதான அபராத தொகையை ஏன் உயர்த்தவில்லை?

மனுதாரர்கள் தங்களது அடையாள அட்டையை இணைப்பது கட்டாயம் என்று அரசு புதிய விதியை சேர்த்துள்ளது. அடையாள அட்டையை கட்டாய மாக்கினால் ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

இதுகுறித்த வழக்கு விசாரணையின் போது வக்கீல் உதவியை பெறக்கூ டாது என்ற விதியும் கண்டிக்கத்தக்கது. இதனால், வெளிப்படைத்தன்மை முற்றிலும் அழியும். எனவே, இந்த திருத்தங்களை அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும். தவறினால், எனது உயிரே போனாலும் கவலையில்லை, அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் அகில்யாநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி யாதவ் பாபா கோவிலில் சாகும் வரை உண்ணா விரத போராட்டத்தை மேற்கொள்வேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com