டெல்லியில் நிர்பயா பாணியில் நடந்த மற்றொரு கொடூரம்

டெல்லியில் பேருந்தில் பயணம் செய்த இளம்பெண் ஓட்டுநர், நடத்துனரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில், படுக்கை வசதி கொண்ட தனியார் சொகுசுப் பேருந்தில் (Sleeper Bus) பயணம் செய்த இளம்பெண் ஒருவர், அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 12-ம்தேதி இரவு பேருந்தில் வந்த பெண்ணை, பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கைது செய்துள்ளனர்.

மேலும் அந்த சொகுசுப் பேருந்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், டெல்லியில் மீண்டும் அதே போன்று ஓடும் பேருந்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com