நிபுணர்கள் சொல்லும்வரை முககவசம் தொடர்ந்து அணிய வேண்டும்: அனுராக் தாக்குர்

இனிமேல் தேவையில்லை என்று நிபுணர்கள் சொல்லும்வரை முககவசம் தொடர்ந்து அணிய வேண்டும் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சில நாடுகள் 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டிருப்பதால், முக கவசம் அணிவது கட்டாயம் அல்ல, விருப்பத்தின் பேரில் அணியலாம் என்று முடிவு எடுத்திருப்பது குறித்து நிருபர்கள் கேட்டனர்

அதற்கு அனுராக் தாக்குர் கூறுகையில், கொரோனா காலத்தில், முக கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை மூலம்தான் மேற்கொண்டு வைரஸ் பரவுவது தடுக்கப்பட்டது. இந்த விஷயத்தில் மருத்துவ நிபுணர்கள்தான் வழிகாட்டி வருகிறார்கள். இனிமேல் முககவசம் அணிய தேவையில்லை என்று கருதும்போது, அதை நிபுணர்கள் சொல்வார்கள். அதுவரை நாட்டு மக்கள் தொடர்ந்து முககவசம் அணிய வேண்டும் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com