இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என நினைப்பவர் இந்துவாக இருக்க முடியாது- மோகன் பகவத்

அமெரிக்காவில் நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றி உள்ளார்
இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என நினைப்பவர் இந்துவாக இருக்க முடியாது-  மோகன் பகவத்
Published on

நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: - “நீங்கள் இந்து அமைப்பைச் சேர்ந்தவர். இந்து ராஷ்டிரம் குறித்து பேசுகிறீர்கள். அப்படியானால் முஸ்லிம்களின் நிலை என்ன? அவர்களை இந்தியாவை விட்டு வெளியேற்றுவீர்களா?” என்று என்னிடம் கேட்கிறார்கள். அதற்கு நான், அப்படி செய்வது இந்துத்துவம் அல்ல. அனைத்து பாதைகளும் ஒரே இலக்கை நோக்கிச் செல்கின்றன என்பதை நம்புவதும், ஒவ்வொரு மனிதருக்கும் சமமான கண்ணியம் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வதும்தான் இந்துத்துவத்தின் அடிப்படை. மனிதர்களிடையே எந்த வேறுபாடும் இல்லை” என்று பதிலளித்தாக கூறினார். இந்தியாவில் ஒரு முஸ்லிம்கூட இருக்கக்கூடாது என்று எந்த இந்துவாவது நினைத்தால், அவர் இந்துவாக இருக்க முடியாது” என்றும் மோகன் பகவத் தெரிவித்தார்.

ஹரியானாவின் தாத்ரியில் கடந்த 1996-ம் ஆண்டு 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தையும் அவர் நினைவுகூர்ந்தார். அந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்றும், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு உதவியதுடன், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளையும் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.“அவர்கள் முஸ்லிம்கள் என்று நாங்கள் அப்போது நினைக்கவில்லை. அனைவருக்கும் சமமாகவே சேவை செய்தோம்” என்றும் மோகன் பகவத் கூறினார்.

அமெரிக்காவில் நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றி உள்ளார். அமெரிக்காவில் மோகன் பகவத் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தெரிவித்திருந்ததால் சர்ச்சை எழுந்திருந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com