

புதுடெல்லி,
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் அட்டவணையை இன்று வெளியிட்டார். இதில், தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் வருகிற ஏப்ரல் 6ந்தேதி நடைபெறும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தமிழகத்திற்கான தேர்தல் செலவின பார்வையாளர்களாக மதுமாதன், பாலகிருஷ்ணன் என 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். காவல்துறை பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி அரோரா கூறும்பொழுது, தமிழகம் அமைதியான மாநிலமாக உள்ளது. ஆனால், ஆர்.கே.நகர், வேலூர் தேர்தல்கள் அதிக பணப்பட்டுவாடா காரணமாகவே ரத்து செய்யப்பட்டது. பணப்பட்டுவாடாவை தடுக்கவே 2 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். பணபட்டுவாடா புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.