முப்படை தலைமை தளபதி நியமனம் எப்போது? - ராஜ்நாத் சிங் பதில்

முப்படை தலைமை தளபதி நியமனம் எப்போது என்பது குறித்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார்.
Image Courtacy: PTI
Image Courtacy: PTI
Published on

புதுடெல்லி,

முப்படைகளின் தலைமை தளபதி பதவி வகித்து வந்த பிபின் ராவத் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி தமிழ்நாட்டில் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார்.

அதைத்தொடர்ந்து அந்த பணியிடம் காலியாக உள்ளது. டெல்லியில் நேற்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, "முப்படை தலைமை தளபதி நியமனம் எப்போது?" என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ராஜ்நாத் சிங் பதில் அளிக்கையில், "முப்படை தலைமை தளபதி நியமனம் விரையில் செய்யப்பட்டுவிடும். அதற்கான செயல்முறைகள் நடந்து வருகின்றன" என குறிப்பிட்டார்.

முப்படை தளபதி பணி நியமனத்துக்கான அரசிதழ் அறிவிப்பு கடந்த 6-ந்தேதி வெளியானது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com