

மேகதாது அணை திட்டத்துக்கு 2,500 ஏக்கர் மாற்று வனநிலத்தை அடையாளம் கண்டு இருப்பதாகவும், விரைவில் இந்த அணை திட்டத்துக்கு அனுமதி கிடைக்கும் என்றும் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கான விரிவான திருத்தப்பட்ட அறிக்கையை கர்நா டக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. இதில், இந்த திட்டத்திற்காக மொத்தம் 12,979 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கர்நாடக அரசு கூறியுள்ளது. மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.16,745 கோடி நிதி ஒதுக்கவும் முடிவு செய்துள்ளது.
மேகதாது அணை திட்டத்தால் காவிரியின் முக்கிய வனப்பகுதிகள் நீரில் மூழ் கும் அபாயம் உள்ளது. அதாவது, காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் சுமார் 7,862 ஏக்கர் நிலமும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சுமார் 4,619 ஏக்கர் நிலம் உள்பட சுமார் 12 ஆயிரத்து 500 ஏக்கர் வனப்பகுதி மூழ்கி அழியும். மேலும் வனப்பகுதியில் உள்ள சுமார் 8.90 லட்சம் மரங்களை வெட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதுதவிர அணையின் நீர்ப்பிடிப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக விவசாயி களுக்கு சொந்தமான மற்றும் வருவாய்த் துறைக்கு சொந்தமான சுமார் 500 ஏக் கர் முதல் 600 ஏக்கர் வரை அழியும் என கூறப்படுகிறது. எனவே மேகதாது அணை திட்டத்தால் அழியும் வனப்பகுதி, விவசாய நிலத்துக்கு மாற்று இடத்தை தேர்வு செய்யும் பணியில் கர்நாடக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் மண்டியாவில் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நேற்று நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், கர்நாடகாவால் 66 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை சேமித்து வைக்கவும், தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் அதன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் முடியும் . இது மண்டியா மற்றும் காவிரிப் படுகையில் உள்ள பிற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்குப் பயனளிக்கும் இதுவரை 2,500 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டுள்ளோம். மீதமுள்ள நிலத்தை கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.