பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்: பாக்.கிற்கு இந்தியா கடும் எதிர்ப்பு

எல்லையில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்: பாக்.கிற்கு இந்தியா கடும் எதிர்ப்பு
Published on

இஸ்லமாபாத்,

பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. சில சமயங்களில் பாகிஸ்தான், எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதற்காக இந்தியா தனது எதிர்ப்பை பாகிஸ்தானிடம் பதிவு செய்துள்ளது.

கடந்த 1 ஆம் தேதி இருநாடுகளின் ராணுவச் செயல்பாடுகளுக்கான இயக்குநாகள் அளவிலான பேச்சுவாத்தை நடைபெற்றபோது இந்த விவகாரத்தை பாகிஸ்தானிடம் இந்தியா எழுப்பியது. கடந்த மாதம், பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினா அத்துமீறி நடத்திய தாக்குதலின்போது, பள்ளிக் குழந்தைகளை பத்திரமாக அந்த இடத்திலிருந்து இந்திய ராணுவம் மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com