மனைவியின் வளைகாப்புக்கு சென்றபோது விபத்தில் ராணுவ வீரர் சாவு

பெலகாவியில் மனைவியின் வளைகாப்புக்கு சென்றபோது விபத்தில் சிக்கி ராணுவ வீரர் உயிரிழந்தார்.
மனைவியின் வளைகாப்புக்கு சென்றபோது விபத்தில் ராணுவ வீரர் சாவு
Published on

பெலகாவி:

பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா கொசூரு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் சங்கொள்ளி (வயது 29). இவர், ராணுவ வீரர் ஆவார். பெலகாவியில் உள்ள ராணுவ மையத்தில் பிரகாஷ் தற்போது பணியாற்றி வந்தார். பிரகாசுக்கு திருமணமாகி விட்டது. அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். பிரகாசின் மனைவிக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) வளைகாப்பு நடைபெற உள்ளது.

மனைவியின் வளைகாப்பில் கலந்து கொள்ள சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் அவர் புறப்பட்டு சென்றார். பெலகாவி சுவர்ணசவுதா அருகே தேசிய நெடுஞ்சாலையில் வரும் போது பிரகாசின் மோட்டார் சைக்கிள் மீது ஒரு வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் உயிர் இழந்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com