சிறுவன் கடத்தல் வழக்கில் கைது: கூடுதல் டி.ஜி.பி. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு - இன்று விசாரணை


சிறுவன் கடத்தல் வழக்கில் கைது: கூடுதல் டி.ஜி.பி. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு - இன்று விசாரணை
x

சிறுவனை கடத்திய வழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக கூடுதல் டி.ஜி.பி.யை கைது செய்ய நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டிருந்தது.

புதுடெல்லி,

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே உள்ள களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 27 வயது வாலிபர் தனுஷ், தேனி மாவட்டத்தை சேர்ந்த 21 வயதான இளம்பெண் விஜயஸ்ரீ ஆகியோரது காதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபரான தனுசின் தம்பியான 17 வயது சிறுவன் கடத்திச் செல்லப்பட்ட விவகாரமும் அது தொடர்பான வழக்கில் தமிழக ஆயுதப்படை போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

முன்னதாக இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமை கைது செய்ய நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து ஜெயராம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இந்த மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் உஜ்ஜல் புயன், மன்மோகன் அடங்கிய அமர்வு தெரிவித்து உள்ளது.

1 More update

Next Story