

பாட்னா,
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய விஜய்யின் தவெக, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பல்வேறு போராட்டங்களை சந்தித்தது.
பின்னர் எதிரணியில் உள்ள கட்சிகள் ஆதரவு தெரிவித்ததையடுத்து மொத்தம் 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் முதல்-அமைச்சாராக விஜய் நேற்று பதவியேற்றார். அவருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் மக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பீகார் மாநிலத்தின் முங்கேர் மாவட்டத்தை சேர்ந்த மணல் மற்றும் இலை ஓவிய கலைஞர் மதுரேந்திர குமார், 3 செ.மீ. அரச இலையில் விஜய்யின் முகத்தை 5 மணி நேரத்தில் நுணுக்கமாக செதுக்கி, தனது கலைப்படைப்பின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து வட மாநில கலைஞர் ஒருவர் அரச இலையில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் உருவத்தை உருவாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.