அருணாச்சலபிரதேசம்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் மரணம்

தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
அருணாச்சலபிரதேசம்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் மரணம்
Published on: 

இட்டா நகர்,

அருணாச்சலபிரதேசத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் உயிரிழந்தார்.

பாதுகாப்புப்படை வீரர் மரணம்

மியான்மர் எல்லையில் அமைந்துள்ள மாநிலம் அருணாச்சலபிரதேசம். இம்மாநிலத்தின் சங்லங் மாவட்டம் நம்பங் பகுதியில் சர்வதேச எல்லையில் பாதுகாப்புப்படையினர் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பாதுகாப்புப்படையினரின் ரோந்து வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் ஹவில்தர் (வயது 42) உயிரிழந்தார். மேலும், 4 வீரர்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற கூடுதல் படையினர் காயமடைந்த வீரர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com