

டெல்லி,
இந்தியாவில் 22,000-க்கும் அதிகமான காட்டு யானைகள் உள்ளன. இந்நிலையில், உலக யானைகள் தினம் இன்று (12.08.2026) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஆசிய காட்டு யானைகளின் தாயகமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், உலக யானைகள் தினத்தன்று, இந்தியாவின் சூழலியல் பாரம்பரியத்தின் இன்றியமையாத அங்கமாகத் திகழும் மாபெரும் யானைகளை நாம் கொண்டாடுகிறோம்.
இந்த பணியில் ஈடுபடும் அனைத்து வனத்துறை ஊழியர்கள், விஞ்ஞானிகள், கால்நடை மருத்துவர்கள், மஹாவுட்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களைப் பற்றியும் நாம் பெருமை கொள்கிறோம்
ஆசிய காட்டு யானைகளின் தாயகமாக இந்தியா திகழ்கிறது. உலகில் மொத்தமுள்ள ஆசிய காட்டு யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில் உள்ளது.
யானைகளின் எதிர்காலத்தை நாம் பாதுகாக்கும்போது, நமது காடுகள், பல்லுயிர் மற்றும் சூழலியல் பாரம்பரியத்தையும் பாதுகாக்கிறோம். வருங்காலத் தலைமுறைகளுக்காக யானைகள் இந்தியாவின் காடுகளிலும் நிலப்பரப்புகளிலும் சுதந்திரமாக நடந்து செல்லட்டும்
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.