

டெல்லி,
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், கொல்கத்தா ஆகிய 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் தொடர்பான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழகம் உள்பட தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக 5 மாநில தலைமை செயலாளர்கள், 5 மாநில தலைமை தேர்தல் ஆணையர்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு அதிகாரிகள் சொந்த மாவட்டத்தில் பணியாற்றி வந்தாலோ?, ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றி வந்தாலோ அவர்களை உடனடியாக பணியிடமாற்றம் செய்ய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.