தமிழக தேர்தல்: மிகுந்த உற்சாகத்துடன் ஜனநாயக கடமை ஆற்ற வாருங்கள் - பிரதமர் மோடி அழைப்பு

சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வழிவகை செய்யுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக தேர்தல்: மிகுந்த உற்சாகத்துடன் ஜனநாயக கடமை ஆற்ற வாருங்கள் - பிரதமர் மோடி அழைப்பு
Published on

சென்னை,

தமிழக சட்டசபைக்கு ஒரேகட்டமாக இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வேளையில், அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இந்த புனிதமான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, தமிழ்நாட்டின் இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு வந்து, சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது,

X

Daily Thanthi
www.dailythanthi.com