குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதாக பெண்களை மயக்கி பாலியல் பலாத்காரம் - ஜோதிடர் கைது

குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி பெண்களை வரவழைத்துள்ளார்.
குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதாக பெண்களை மயக்கி பாலியல் பலாத்காரம் - ஜோதிடர் கைது
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்தவர் யூசப் அலி (வயது 45). ஜோதிடரான இவர், குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள், கஷ்டங்கள் அரபி ஜோதிடம் முறையில் தீர்க்கப்படும் என்று கூறி வந்தார். இதை நம்பிய ஒரு பெண், அவரை தொடர்பு கொண்டு உள்ளார்.

அந்த பெண்ணை வீட்டிற்கு வரவழைத்தார். அங்கு வைத்து பெண்ணுக்கு ஜோதிடம் பார்ப்பதாக கூறி யூசப் அலி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. மேலும் கடந்த 22-ந் தேதி திருச்சூர் மாவட்டம் கீழ்த்தாணி பகுதியில் உள்ள ஜோதிட நிலையத்துக்கு அதே பெண்ணை வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் காட்டூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் யூசப் அலி ஜோதிடம் பார்ப்பதாக கூறி பெண்களை வரவழைத்து பாலியல் பலாத்காரம் மற்றும் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. கடந்த ஆண்டு தாழ்வு மனப்பான்மையை நீக்கி தருவதாக கூறி ஒரு பெண்ணை நம்ப வைத்து ஜோதிட நிலையத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இதுகுறித்து வெளியில் யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்று பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார். கையில் உள்ள விஷத்தை நீக்குவதாக கூறி மற்றொரு பெண்ணை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். அவரிடம் இருந்து 8 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை பறித்து விட்டார்.

இதேபோல் ஜோதிடம் பார்ப்பதாகவும், குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதாகவும் கூறி பெண்களை வரவழைத்து, அவர்களது கை, நெற்றியில் ஒரு திரவத்தை வைத்து உள்ளார். பின்னர் அந்த திரவத்தை மூக்கால் நுகர செய்தவுடன், பெண்கள் மயங்கி உள்ளனர். பின்னர் அவர்களை யூசப் அலி பாலியல் பலாத்காரம் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதுகுறித்து சில பெண்கள் புகார் அளித்து உள்ளனர். அதன் பேரில் போலீசார், திருச்சூரில் தலைமறைவாக இருந்த யூசப் அலியை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com