

புதுடெல்லி,
டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று அதிகபட்ச அளவாக புதிதாக 4,853 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,64,341 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 44 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,356 ஆக உயர்ந்துள்ளது. தற்போது டெல்லியில் 27,873 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 3,30,112 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.