இணைய மோசடி, ‘டீப்பேக்’ அச்சுறுத் தலை ஒழிக்க சர்வதேச வழிமுறை - உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

தொலைத்தொடர்பு துறையில், நுகர்வோர் என்ற நிலையில் இருந்து படைப்பாளி என்ற நிலைக்கு இந்தியா முன்னேறி உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
இணைய மோசடி, ‘டீப்பேக்’ அச்சுறுத் தலை ஒழிக்க சர்வதேச வழிமுறை - உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு
Published on: 

புதுடெல்லி,

நாடுகளின் எல்லைகளை தாண்டி நடக்கும் இணைய மோசடி, 'டீப்பேக்' ஆகிய அச்சுறுத்தல்களை ஒழிக்க சர்வதேச வழிமுறையை உருவாக்க ஒன்றுபட வேண்டும் என்று உலக நாடுகளின் அரசுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இணைய குற்றங்கள்

டெல்லியில், இந்திய மொபைல் காங்கிரசின் 10-வது மாநாடு தொடங்கி யது. தொலைத்தொடர்பு துறையும், இந்திய செல்லுலர் ஆபரேட்டர்கள் சங்கமும் இணைந்து இம்மாநாட்டை நடத்துகின்றன. 10-ந்தேதிவரை மாநாடு நடக்கிறது.

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:-

இணைய மோசடிகளும், இணைய குற்றங்களும் நாடுகளின் எல்லைகளை மதிப்பது இல்லை என்று உங்களுக்கே தெரியும். அவை ஏற்கனவே எல்லைகளை தாண்டி விட்டன.

ஒரு நாட்டில் அமர்ந்திருக்கும் ஒருவர், இன்னொரு நாட்டில் உள்ள மோசடிக்காரர் உதவியுடன் மூன்றாவது நாட்டில் குற்றம் செய்ய முடியும்.

டீப்பேக்ஸ் வீடியோக்கள்

அதுபோல், டீப்பேக்ஸ் வீடியோக்கள் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத் துள்ளன. இணைய மோசடிகள், டீப்பேக்ஸ் என்ற இரு அச்சுறுத்தல்களை ஒழிக்க சர்வதேச வழிமுறையை நாடுகள் உருவாக்க வேண்டும். இதற்கு அரசுகள், தொழில்நுட்ப நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள். நிதி நிறுவனங்கள் இந்த வழிமுறையுடன் இணைய வேண்டும்.

இத்தகைய மோசடிகள் மக்களை அடைவதற்கு முன்பே அவற்றை தடுப்ப தற்கான சர்வதேச வழிமுறையை உருவாக்குவோம் என்று உலகம் முழுவதும் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கி றேன்.

இந்த விஷயத்தில் இந்தியா நிறைய அனுபவம் பெற்றுள்ளது. தனது அனுபவங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது. ஒரு சாதாரண மனிதன். தன்னை அழைப்பது யார்? தனக்கு வந்துள்ள செய்தி நம்பகமானதா? தனது பணம் பாதுகாப்பாக இருக்குமா?, தனிப்பட்ட தரவு பாதுகாப்பாக இருக்குமா? என்று அறிந்து கொள்வது அவசியம்.

ரூ.5 லட்சம் கோடி

செல்போன்கள், தகவல் தொடர்புக்கு மட்டுமின்றி, ஆட்சி நிர்வாகத்துக்கும், பொதுச்சேவை வழங்குவதற்கும் முக்கிய சாதனமாக திகழ்கின்றன. செல்போனுடன் இணைந்த வங்கிக்கணக்குகளில், நேரடி பணப்பலன் திட்டத்தின்கீழ், சுமார் ரூ.50 லட்சம் கோடி அனுப்பி உள்ளோம். இப்படி அனுப்பியதால், சுமார் ரூ.5 லட்சம் கோடி, தவறானவர்கள் கைகளுக்கு செல்லாமல் சேமிக்கப்பட்டுள்ளது. இது சிறிய தொகை அல்ல.

இப்படி தவறாக பெற்ற வருமானம் நின்றதால், சம்பந்தப்பட்டவர்கள் மோடியை விரும்புவார்களா? நான் செய்தது சரியா? இல்லையா? அதை செய்ய வேண்டுமா? கூடாதா? அவர்கள் எவ்வளவு கூச்சலிட்டாலும் நான் இதை செய்வதில் உறுதியாக இருக்கிறேன்.

பயனாளிகளுக்கு பணம்

இதே பழைய முறையாக இருந்திருந்தால், ரூ.5 லட்சம் கோடி அரசுப்பணம், தவறானவர்களின் பாக்கெட்டை நிரப்பி இருக்கும். மோடி இதை நிறுத்தி இருக்கிறான். தற்போது சரியான பயனாளிகளுக்கு பணம் சென்று கொண்டிருக்கிறது.

தொலைத்தொடர்பு துறையில், நுகர்வோர் என்ற நிலையில் இருந்து படைப்பாளி என்ற நிலைக்கு இந்தியா முன்னேறி உள்ளது. பொருட்களை வடிவமைப்பது, தொழில்நுட்பங்களையும், அறிவுசார் சொத்துகளையும் சொந்தமாக உருவாக்குவதை நோக்கி முன்னேறி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில், பார்தி ஏர்டெல் குழும தலைவர் சுனில் மிட்டல், ஜியோ இன் போகாம் தலைவர் ஆகாஷ் அம்பானி, குமார் மங்கலம் பிர்லா மற்றும் ஏராளமான தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஒன்றரை லட்சம்பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com