

மராட்டிய மாநிலம் யவத்மால் பகுதியை சேர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் மங்கேஷ் சிசோடியா என்கிற தாக்கூர். இவரது மனைவி நிஷா தாக்கூர். இந்த தம்பதியின் 2 வயது மகன் ருத்ரான்ஷ். சமீபத்தில் மங்கேஷ் தனது குடும்பத்தினருடன் யவத்மாலில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமிற்கு புதிய ஸ்கூட்டரை டெலிவரி எடுக்கச்சென்றார். அங்கு உடன் சென்ற அவர்களது மகன் ருத்ரான்ஷ் வெள்ளை நிற டி-சர்ட், ஜீன்ஸ் பேன்ட் மற்றும் நீல நிற கூலிங்கிளாஸ் அணிந்து இரு கைகளையும் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு ஸ்கூட்டர் அருகே நின்றபடி ஒரு சூப்பர் ஸ்டார் போலத் தன்னம்பிக்கையுடன் ஸ்டைலாக போஸ் கொடுத்தான்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி 10 கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. நெட்டிசன்கள் அச்சிறுவனை 'ஆரா கிங்', 'குட்டி சி.இ.ஓ.' எனப் பாராட்டினர். இதனைத்தொடர்ந்து, ஷோரூம் உரிமையாளர் திலீப் போப்டே பாட்டீல், சிறுவன் ருத்ரான்ஷின் மழலையர் கல்வி முதல் கல்லூரி பட்டப்படிப்பு வரையிலான முழுக்கல்வி செலவையும் தாங்களே ஏற்பதாக அறி வித்து, சிறுவனையும் பெற்றோரையும் நேரில் அழைத்து கவுரவித்தார்.
இது குறித்து சிறுவனின் தாயார் நிஷா தாக்கூர் கூறுகையில், "இந்த வீடியோ இவ் வளவு பெரிய வைரலாகும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை, ஷோரூம் உரிமை யாளரின் இந்த உதவி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.இதற்கிடையே, ருத்ரான்சை விளம்பரங்கள் மற்றும் இசை ஆல்பங்களில் நடிக்க வைக்க பல முன்னணி நிறுவனங்கள் அணுகியுள்ளன. ஆனால், பணம், புகழை விட அவனது இயல்பான குழந்தை பருவமே முக்கியம் எனக்கூறி பெற்றோர் அந்த வணிக வாய்ப்புகளை நிராகரித்துவிட்டனர்.