திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.8 கோடி தங்கம் சிக்கியது

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கம் சிக்கியது.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.8 கோடி தங்கம் சிக்கியது
Published on

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பெரிய அளவில் தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ஓமன் நாட்டு விமானத்தில் வந்த ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனையிட்டனர். அவர் கொண்டு வந்த பையில் ரூ.8 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. தங்க கட்டிகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுனில் என்பது தெரியவந்தது. இந்த கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com