பொதுமக்கள் மீது தாக்குதல்கள்; வரும் 23ந்தேதி அமித்ஷா காஷ்மீர் பயணம்

பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை அடுத்து வரும் 23ந்தேதி அமித்ஷா காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்கிறார்.
பொதுமக்கள் மீது தாக்குதல்கள்; வரும் 23ந்தேதி அமித்ஷா காஷ்மீர் பயணம்
Published on

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து காணப்பட்டது. இந்த மாத முதல் வாரத்தில் 7 பேர் வரை கொல்லப்பட்டனர். அவர்களில் பள்ளி பெண் முதல்வர் மற்றும் ஆசிரியரும் அடங்குவர்.

இதன்பின்னர் கடந்த சில நாட்களில் பீகாரை சேர்ந்த 3 பேர் மற்றும் உ.பி.யை சேர்ந்த ஒருவர் என 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதனால் பதற்றத்துடன் காணப்படும் காஷ்மீரில் ஏராளமான போலீசாரும், ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இன்று காலை பிரதமர் மோடியுடன் எல்லை பாதுகாப்பு குறித்து உள்துறை அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் வரும் 23ந்தேதி அமித்ஷா காஷ்மீர் செல்ல உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால், ஸ்ரீநகரில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com