டிஜிட்டல் கைது செய்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பெண் எம்.எல்.ஏ.வை மிரட்டி பணம் பறிக்க முயற்சி

மத்திய பயங்கரவாத தடுப்பு பிரிவில் இருந்து பேசுகிறோம் என பெண் எம்.எல்.ஏ.விடம் பேசியுள்ளனர்.
டிஜிட்டல் கைது செய்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பெண் எம்.எல்.ஏ.வை மிரட்டி பணம் பறிக்க முயற்சி
Published on

பாலக்காடு,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோங் காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சாந்தகுமாரி என்பவர் உள்ளார். இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்றபோது எதிர்முனையில் பேசியவர் நாங்கள் மத்திய பயங்கரவாத தடுப்பு பிரிவில் இருந்து பேசுகிறோம். உங்களது செல்போன் எண் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளிடம் இருந்து கிடைத்தது.

அவர்களுக்கு மும்பையில் உள்ள உங்களது வங்கிக்கணக்கில் இருந்து நிதியுதவி அளித்துள்ளீர்கள் என ஆங்கிலம், இந்தியில் பேசிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார். தொடர்ந்து சிறிதுநேரத்தில் வந்த அழைப்பில் திருவனந்தபுரம் சைபர் செல் தலைமையகத்தில் இருந்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் பேசுவதாக மலையாளத்தில் அறிமுகமாகி உங்கள் மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு துண்டித்தார்.

தொடர்ந்து வீடியோ காலில் போலீஸ் சீருடை அணிந்தபடி காணப்பட்ட ஒருவர், சாந்தகுமாரி எம்.எல்.ஏ.விடம். விசாரணை நடத்தி தனி அறைக்கு செல்லும்படி கூறினார். அதன்படி அவரும் வீட்டில் இருந்த தனி அறைக்கு செல்லவே நீங்கள் தற்போது டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளீர்கள்; அதனால் அறை, வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று தெரிவித்தார். தொடர்ந்து ஆதார் கார்டு, வங்கிக்கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டனர்.

இதனால் சந் தேகம் அடைந்த சாந்தகுமாரி எம்.எல்.ஏ., தனது கார் டிரைவருக்கு தகவல் தெரிவித்து அவர் மூலம் குழல்மந்தம் போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே அவருக்கு பலமுறை செல்போன் அழைப்புகள் வந்தது. ஆனால் அதை சாந்தகுமாரி எம்.எல்.ஏ. ஏற்கவில்லை. போலீசாரின் விசாரணையில் டிஜிட்டல் கைது என்ற பெயரில் மோசடி கும்பல் சாந்தகுமாரி எம்.எல்.ஏ.வை மிரட்டி பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. ஆனால் அந்த மோசடி கும்பல் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வில்லை.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com