

ரகசிய வீடியோ
கர்நாடக மந்திரிசபை கூட்டம் கடந்த 6-ந்தேதி பெங் களூரு விதானசவுதாவில் நடைபெற்றது. இதில் பேசிய முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சியினர் மந்திரிகளை ரகசிய வீடியோ எடுக்க முயற்சி செய்கிறார்கள் என்றும், அதனால் நீங்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்ட னம் தெரிவித்தன. ஊழல்கள் வெளியே தெரிந்துவிடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி மந் திரிகளுக்கு டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டு உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித் தன. இந்த நிலையில் இதுகுறித்து முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூரு வில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
என்னையும், மந்திரிகளையும் ரகசிய வீடியோ எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. நான் முதல்-மந்திரி ஆன பிறகு சிலர் என்னை வந்து ரகசிய வீடியோ எடுக்க முயற்சி செய்தனர். அவர்களின் புகைப்படம் உள்ளிட்ட ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. மாறு வேடத்தில் வந்து வீடியோ எடுப்பதை தொடங்கியுள்ளனர்.
நான் பொறுப்பான பதவியில் உள்ளேன். நான் என்ன பேசினாலும் ஆதாரங்கள் இல்லாமல் பேச மாட்டேன். நான் முதல்-மந்திரி ஆன பிறகு நடைபெற்ற முயற்சிகளை நான் கூறுகிறேன். நான் உள்பட இன்னும் எந்தெந்த தலைவர்களை ரக சிய வீடியோ வலையில் சிக்க வைக்க முயற்சி செய்தனர் என்ற விவரங்களும் என்னிடம் உள்ளன.
ஆனால் இதுகுறித்து நான் அனைத்து விஷயங்களையும் பகிரங்மாக பேச வேண்டிய அவசியம் இல்லை. காலம் வரும்போது எல்லாவற்றுக்கும் பதிலளிக்கி றேன். இப்போதே அனைத்தையும் கூற முடியாது. இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதும் எனக்கு தெரியும். நான் இவ்வாறு கூறினால் சிலர் தன்னை கூறியதாக நினைத்து கொண்டு பேசுகிறார்கள்.அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. என்னிடம் வந்தவர்கள் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து போலீசாரை அழைத்து அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆவணங்களையும் தயார் செய்து வைத்துள்ளேன்.
ஆனால் அதை இப் போது பகிரங்கப்படுத்த மாட்டேன். இதற்கு பிதாமகன் யார் என்பது எனக்கு தெரியும்.அதிகாரிகளையும் சிக்கலில் சிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினேன். இதற்கு முன்பு சில ஊடகத்தினர் ரகசிய வீடியோ எடுக்க என்னிடம் வந்தனர். சில தலைர்கள் இந்த பணிக்கு தனியார் ஏஜெண்டுகளை நியமித்து கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.