உதவுவதுபோல் நடித்து, பர்ஸ் திருட முயற்சி; ஒரு நொடியில் பிடித்த டெல்லி போலீஸ்காரர்: வைரலான வீடியோ

டெல்லியில் பர்சை திருட முயன்றவரை பிடித்த போலீஸ்காரருக்கு வாழ்த்துகள், வணக்கங்கள், சிறந்த பணி, நல்ல பணி என பலரும் பாராட்டுகளை தெரிவித்து கொண்டனர்.
உதவுவதுபோல் நடித்து, பர்ஸ் திருட முயற்சி; ஒரு நொடியில் பிடித்த டெல்லி போலீஸ்காரர்: வைரலான வீடியோ
Published on

புதுடெல்லி,

டெல்லியில் சதர் பஜார் காவல் நிலைய பகுதியில், காவலர் சச்சின் என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது, ஒரு நபர் மீது சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. ஓடி சென்று அவரை பிடித்து, கைது செய்து விட்டார். இதுபற்றிய வீடியோ ஒன்று டெல்லி போலீசாரின் எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு உள்ளது.

கடந்த 8-ந்தேதி வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், பைக்கில் நபர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அப்போது இளைஞர் ஒருவர் அந்த நபரின் பைக்கை ஸ்டார்ட் செய்ய உதவுவது போல் நடித்து, அவருடைய பர்சை திருடி விட்டு தப்பி செல்ல முயன்றுள்ளார். அப்படி பர்சை எடுத்ததும், காவலர் சச்சின் அதனை கவனித்து உடனடியாக ஓடி அவரை பிடித்து விட்டார்.

இந்த வீடியோ பகிரப்பட்டதும், 1.6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு உள்ளனர். 2 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் லைக் செய்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் விமர்சனங்களையும் வெளியிட்டு உள்ளனர்.

வாழ்த்துகள், வணக்கங்கள், சிறந்த பணி, நல்ல பணி என பலரும் டெல்லி போலீசுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டனர். இதுபோன்ற போலீஸ்காரர்களே டெல்லிக்கு தேவை. குற்றம் நடந்தது தெரிந்ததும் தப்பியோடும் போலியான ஆட்கள் இல்லை என ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.

எனினும், சிலர் சந்தேகமும் தெரிவித்து உள்ளனர். பர்சை திருட முயன்ற நபரை காவலர் பிடிப்பதற்கு முன், எப்படி சரியாக அவர் கேமராவில் படம் பிடிக்கப்பட்டார் என்று கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com