

பெங்களூரு,
கர்நாடகத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் சுமார் 3 லட்சம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இந்த ஆட்டோக்கள் மேற்கூரை மஞ்சள் நிறத்திலும், அடிப்பகுதி பச்சை நிறத்திலும் இருக்கின்றன. இந்த நிறத்தைதான் பயன்படுத்த வேண்டும் என்பது அரசின் உத்தரவு ஆகும். பெங்களூரு பசுமை தோட்டங்களின் நகரமாக இருப்பதால், அதை பிரதிபலிக்கும் நோக்கத்தில் இந்த நிறம் கட்டாயம் ஆக்கப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் மாநில அரசின் மானியத்தல் ஏழை தொழிலாளர்கள் பெறும் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களின் நிறம் கர்நாடக கொடியான மஞ்சள், சிவப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் உதவியால் இந்த வாகனங்கள் பெறப்பட்டது என்பதை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் மாநில அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் மாநில அரசின் அதிகாரப்பூர்வ முத்திரையும் அந்த வாகனங்கள் இடம் பெறும்.