

புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சி வழியாக ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் மக்களுடன் உரையாடி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் இன்று உரையாடிய பிரதமர் மோடி, அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் பின்னர் மக்கள் காட்டிய முதிர்ச்சியையும், பொறுமையையும் பாராட்டுவதாக குறிப்பிட்டார். இதன் மூலம் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும், 'முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்' என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி பேசிய அவர், தேசிய நலனை விட பெரியது எதுவுமில்லை என்பதை 130 கோடி இந்தியர்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர் என்றார்.