

புதுடெல்லி,
கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ந் தேதி, காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்தது. அதில் இருந்து இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்பரப்பிலும், பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்பரப்பிலும் தடை விதிக்கப்பட் டது. ஓரிரு நாட்களுக்கு முன்பு. பாகிஸ்தான் வான்பரப்பில் இந் திய விமானங்களுக்கான தடையை மே 24-ந் தேதிவரை நீட்டிப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது.
இந்நிலையில், இந்தியாவும் இந்திய வான்பரப்பில் பாகிஸ்தான் விமானங்களுக்கான தடை 24-ந்தேதிவரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் கடந்த ஓராண்டாக தடை இருந்து வருகிறது. பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் இயக்கும் விமானங்கள், ராணுவ விமானங்கள், பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் ஆகியவற்றுக்கு இத்தடை பொருந்தும்.