கர்நாடகத்தில் வாகன ஓட்டிகள் பாதியளவு ‘ஹெல்மெட்’ அணிய தடை

கர்நாடகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் பாதியளவு ஹெல்மெட் அணிய தடை விதித்து போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
ஹெல்மெட்
Published on: 

கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் போக்குவரத்து போலீசாரிடம் அபராதம் செலுத்துவதில் இருந்து தப்பிக்க பாதியளவு ஹெல்மெட்டுகளை இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற பாதியளவு ஹெல்மெட்டுகளை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்து கடந்த வாரம் போக்குவரத்து துறை மந்திரி பைரதி சுரேஷ் மற்றும் போலீஸ் மந்திரி பிரியங்க் கார்கே ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். அப் போது பாதியளவு ஹெல்மெட்டுகள் அணிய தடை விதிக்க அரசு முடிவு செய் துள்ளதாக மந்திரி பைரதி சுரேஷ் கூறி இருந்தார்.

வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

இந்த நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக பாதியளவிலான ஹெல்மெட்டுகளை அணிய தடை விதித்து போக்குவரத்து துறை நேற்று அதிகாரப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கு பதிலாக பி.ஐ.எஸ். அல்லது ஐ.எஸ்.ஐ. முத்திரைகளுடன் கூடிய தரமான ஹெல்மெட்டுகளை மட்டுமே அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விற்பனை செய்யவும் தடை

மேலும் விதிமுறைகளை மீறி பாதியளவு ஹெல்மெட்டுகளை அணியும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள் ளது. அத்துடன் மாநிலம் முழுவதும் பாதியளவு ஹெல்மெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்து போக்குவரத்து துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com