காங்கிரஸ் கட்சியுடன் திரிணாமுல் காங்கிரஸ் இணைகிறதா? கேசி வேணுகோபால் விளக்கம்

"காங்கிரஸ் - திரிணமூல் காங்கிரஸ் கட்சி இணைவதாக வெளியாகும் செய்தி முற்றிலும் வதந்தி என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.
காங்கிரஸ் - திரிணமூல் காங்கிரஸ்
Published on

மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் அந்தக்கட்சிக்குள் மோதல் வெடித்துள்ளது. மொத்தம் உள்ள 80 எம்.எல்.ஏ.க்களில் 58 பேர் மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். எம்பிக்களும் மம்தாவுக்கு எதிராக திரும்பிய நிலையில், டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்துகொண்ட ,மம்தா பானர்ஜி பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப்பேசினார்.

மே.வங்க அரசியலில் பரபரப்பு

அப்போது, காங்கிரஸ் - திரிணமூல் காங்கிரஸ் கட்சியை இணைப்பது குறித்து சோனியா காந்தி, மம்தாவிடம் கேட்டதாகவும் அதுகுறித்து முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும் என்று மம்தா கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. இது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் விளக்கம் அளித்துள்ளார்.

இணைப்பு இல்லை

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: "இவை அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள். தேசிய பிரச்சினைகளை மேலும் திறம்பட முன்வைப்பது குறித்து ஆலோசிப்பதற்காகவே திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்தனர்” என்றனர். மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக மூன்று முறை பதவி வகித்த மம்தா பானர்ஜி, 1997-ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர், மாநில காங்கிரஸ் தலைமையுடனான கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். 1998 ஆம் ஆண்டு தனிக்கட்சி தொடங்கிய நிலையில்,மேற்கு வங்காளத்தில் முதன்மை கட்சியாக வளர்ந்தது. 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி அங்கு ஆட்சியையும் மம்தா பானர்ஜி பிடித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com