பினாமி சொத்து வழக்கு: ராபர்ட் வதேராவிடம் 2வது நாளாக விசாரணை; வருமான வரித்துறை சரமாரி கேள்விகள்

பினாமி சொத்து வழக்கில் ராபர்ட் வதேராவிடம் 2வது நாளாக விசாரணை நடத்திய வருமான வரித்துறையினர் சரமாரி கேள்விகள் எழுப்பினர்.
பினாமி சொத்து வழக்கு: ராபர்ட் வதேராவிடம் 2வது நாளாக விசாரணை; வருமான வரித்துறை சரமாரி கேள்விகள்
Published on

புதுடெல்லி,

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது, பினாமி சொத்து சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி கோரியபோது, அவர் கொரோனா சூழலை காரணம் காட்டி ஆஜராக மறுத்தார். இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் தாங்களாக நேரடியாக சென்று விசாரிக்க தொடங்கினர்.

நேற்று முன்தினம் (திங்களன்று) தொடர்ந்து 8 மணி நேரம் அவரது அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடந்தது. நேற்று 2வது நாளாக விசாரணை தொடர்ந்தது.

வதேரா அங்கம் வகிக்கும் ஒரு நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்ட சொத்து விவரம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. ஏற்கனவே அமலாக்க துறை அதிகாரிகள் 2015ம் ஆண்டில் பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com