பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் - கடும் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்

‘சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை' என்ற பாடத்தில் தமன்னா பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

பெங்களூரு ஹெப்பால் பகுதியில் சிந்தி என்ற தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் 7-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. 'சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை' என்ற பாடத்தில் தமன்னா பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர், நடிகை தமன்னா குறித்து தங்கள் குழந்தைகள் கற்க வேண்டிய விஷயம் என்ன உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். தமன்னா தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் முன்னணி கதாநாயகி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com