பஞ்சாபில் வாக்காளர் பட்டியலில் பகத்சிங்கின் புகைப்படம்

இறுதி வாக்காளர் பட்டியலில் இந்த தவறு முழுமையாக திருத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட வாக்காளரின் உண்மையான புகைப்படம் சேர்க்கப்பட்டு விட்டது.
பஞ்சாபில் வாக்காளர் பட்டியலில் பகத் சிங்கின் புகைப்படம்
வாக்காளர் பட்டியல்
Published on: 

சண்டிகர்,

வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயருக்கு நேராக விடுதலை போராட்ட வீரர் பகத் சிங்கின் புகைப்படம் இடம் பெற்றிருந்த சம்பவம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகத் சிங்கின் புகைப்படம்

பஞ்சாப் மாநிலம், லூதியானா கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 38-வது வார்டில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. அப்போது அங்குள்ள ஒரு வாக்காளர் பட்டியலில், வரிசை எண் 422-ல் இருந்த வாக்காளரின் பெயருக்கு நேராக அவரது புகைப்படத்திற்கு பதிலாக, சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் புகைப்படம் அச்சிடப்பட்டு இருந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சியினர், தேர்தல் ஆணையத்தின் இந்த அலட்சிய போக்கிற்கு கண்டனம் தெரிவித்தனர்.

தேர்தல் அதிகாரி விளக்கம்

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறும்போது, “கடந்த ஆகஸ்ட் 13-ந் தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில்தான் இந்த தொழில்நுட்ப தவறு இருந்தது. அதன் பிறகு நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்த பணியின் போது இந்த தவறு சரிசெய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com