ஆலங்கட்டி மழை காரணமாக புவனேஸ்வர்-டெல்லி விமானம் அவசரமாக தரையிறக்கம்

ஆலங்கட்டி மழை காரணமாக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஆலங்கட்டி மழை காரணமாக புவனேஸ்வர்-டெல்லி விமானம் அவசரமாக தரையிறக்கம்
Published on

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 170 பயணிகளுடன் விஸ்தாரா விமானம் இன்று மதியம் 1.45 மணிக்கு டெல்லி நோக்கி புறப்பட்டது. விமான புறப்பட்ட சில நிமிடங்களில் ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கியது.

ஆலங்கட்டி மழையால் விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விமானி உடனடியாக தரைகட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானம் பிஜு பட்நாயக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் சென்ற பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை வேறு விமானத்தில் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் பிஜு பட்நாயக் விமான நிலையத்தின் இயக்குனர் பிரதான் தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com