

பாட்னா,
பீகார் மாநிலம், ஜெனாபாத்தை சேர்ந்தவர் குணால் குமார். இவரது மனைவி அன்ஷி தேவி (வயது 25) குணால் குமார் வேலைக்கு செல்லாமல் எப்போதும் மது போதையில் சுற்றி வந்தார். இதனால் கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று குணால் குமாரின் குடும்பத்தினர் விவசாய நிலத்திற்கு வேலைக்கு சென்றனர். அவரது மனைவி மட்டும் வீட்டில் இருந்தார். அவர் குடும்பத்தினருக்காக மத்திய உணவு தயார் செய்து கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் வெளியே சென்ற குணால் குமார் நண்பர்களுடன் மது குடித்தார். போதை தலைக்கேறியதும் அவருக்கு பசி ஏற்பட்டது. உடனே அவர் வீட்டிற்கு வந்தார். அவரது மனைவி அன்ஷு தேவியிடம் உடனே சாப்பாடு வேண்டும் என்று கேட்டார்.
அவரது மனைவி சமையல் செய்து கொண்டிருக்கிறேன். சிறிது நேரத்தில் தயாராகி விடும் என கூறினார்.
இதனை கேட்டதும் குணால் குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. ஏன் தாமதமாக சமையல் செய்து கொண்டிருக்கிறாய் என வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அதற்கு மனைவி சிறிது நேரத்தில் உணவு தயாராகி விடும் என தெரிவித்தார்.
இதனை கேட்டதும் குணால் குமாருக்கு மனைவி மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது.
வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து மனைவியை கிழே தள்ளி சரமாரியாக தாக்கினார். அவரது மனைவி டன்னை எதுவும் செய்து விட வேண்டாம் என கெஞ்சினார். இருப்பினும் கோடாரியால் மனைவியின் கழுத்தில் வெட்டினார். இதில் தலை துண்டித்து 10 அடி உயரத்தில் விழுந்தது.
வீடு முழுவதும் ரத்த வெள்ளமாக காட்சியத்தது. இறந்த மனைவியின் தலையை ஒரு கயிற்றில் கட்டி வீட்டின் முன்பக்கமாக உள்ள மரத்தில் தொங்கவிட்டார். எங்கும் தப்பித்து செல்லாமல் மரத்துக்கு அடியிலேயே அமர்ந்திருந்தார்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்ஷு தேவியின் தலையையும் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திர்க்கு அனுப்பி வைத்தனர்.
குணால் குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.