ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்


ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
x

Image Courtesy : ANI

தினத்தந்தி 21 Aug 2025 2:49 PM IST (Updated: 21 Aug 2025 2:51 PM IST)
t-max-icont-min-icon

குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் விவாதமின்றி மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. அதில் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதா ஆன்லைன் விளையாட்டு தளங்களை சட்ட வரம்புக்குள் கொண்டு வந்து, டிஜிட்டல் செயலிகள் மூலம் நடைபெறும் சூதாட்டங்களுக்கு அபராதம் விதிக்க வழி செய்யும்.

இதற்கிடையே ஆன்லைன் சூதாட்ட செயலி குறித்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது. விதிகளை மீறி ஆன்லைன் பண விளையாட்டு சேவையை வழங்கும் நபருக்கு, மற்றும் பரிவர்த்தனையில் ஈடுபடுவோருக்கு, அல்லது நிதியை அங்கீகரிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1 கோடி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது. குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் விவாதமின்றி மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் முழக்கத்துக்கு இடையே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா நிறைவேறியுள்ளது.

1 More update

Next Story