ஆமதாபாத்-டெல்லி ஆகாசா ஏர் விமானம் மீது பறவை மோதல்

ஆமதாபாத் நகரில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்ற ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்றின் மீது பறவை மோதியது.
ஆமதாபாத்-டெல்லி ஆகாசா ஏர் விமானம் மீது பறவை மோதல்
Published on

புதுடெல்லி,

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் இருந்து டெல்லி நோக்கி ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் கியூ.பி. 1333 என்ற எண் கொண்ட போயிங் ரக விமானம் ஒன்று இன்று பறந்து சென்றது.

இந்த நிலையில், ஆமதாபாத் நகரில் இருந்து கிளம்பி மேலெழுந்து சென்ற விமானத்தின் மீது நடுவழியில் 1,900 அடி உயரத்தில் திடீரென பறவை ஒன்று மோதியது.

எனினும், விமானம் தரையிறங்க வேண்டிய பகுதியில் பாதுகாப்புடன் இறங்கியுள்ளது என ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்து உள்ளார்.

விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்புடன் கீழே இறங்கினர். இதனை தொடர்ந்து விமானத்தில் முழு அளவில் ஆய்வு செய்வதற்காகவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

இதேபோன்று, பெங்களூருக்கு செல்ல வேண்டிய ஆகாசா ஏர் விமானம் ஒன்று கடந்த 14-ந்தேதி பறவை மோதிய நிலையில், அந்த விமானம் பின்னர் மும்பை நகருக்கு திருப்பி விடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com