திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களை மிரட்டிய பா.ஜ.க. பெண் வேட்பாளர்

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களை பா.ஜ.க. பெண் வேட்பாளர் மிரட்டிய காட்சிகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளன. #TMCworkers
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களை மிரட்டிய பா.ஜ.க. பெண் வேட்பாளர்
Published on

மேற்கு வங்காளத்தில் கட்டல் தொகுதிக்கான பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுபவர் பாரதி கோஷ். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த இவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று வீட்டின் முன் அமர்ந்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களை மிரட்டியுள்ளார்.

அவர், நீங்கள் வாக்கு பதிவு செய்ய கூடாது என பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறீர்கள். உங்களை வீட்டில் இருந்து வெளியே இழுத்து போட்டு நாய்களை போன்று அடித்து, உதைத்து விடுவேன். உங்களை அடிப்பதற்கு உத்தர பிரதேசத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோரை அழைத்து வருவேன் என்றும் கூறி மிரட்டியுள்ளார். ஆனால் இதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில், கோஷின் ஆதரவாளர்கள் அவர்களை தங்களது மொபைல் போன்களில் படம் பிடித்து உள்ளனர். இதன்பின் வீட்டின் வெளியே அமர்ந்திருந்த அவர்களை எழுந்து செல்லுங்கள் என கோஷ் கூறுகிறார். இதனை அடுத்து 2 பேர் எழுந்து அங்கிருந்து செல்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com