மேற்கு வங்காளத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரம்: 15 நாள்கள் முகாமிடும் அமித்ஷா

மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலையொட்டி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 15 நாள்கள் தங்கி பிரசாரம் செய்யவுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்துக்கு 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 23-ந்தேதி முதல்கட்ட தேர்தலும், 29-ந்தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலையொட்டி 15 நாள்கள் தங்கி பிரசாரம் செய்யவிருப்பதாக மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இன்று மேற்கு வங்காளத்திற்கு சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பவானிபூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுவேந்து அதிகாரியுடன் இணைந்து வாக்கு சேகரித்து 'ரோடுஷோ' சென்றார். மேலும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 15 நாள்கள் மேற்கு வங்காளத்தில் தங்கி பிரசாரம் செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளார். இது மேற்கு வங்காள அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 2016 தேர்தலில் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, தனது தீவிரப் பிரசாரத்தால் 2021 தேர்தலில் 77 இடங்களைக் கைப்பற்றி காங்கிரசைப் பின்னுக்குத் தள்ளி எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com