விருதுநகரில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் பிரசாரம்

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
விருதுநகரில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் பிரசாரம்
Published on

விருதுநகர்,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில் களமிறங்கியுள்ளது. இதில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளாராக நயினார் நாகேந்திரன் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், நயினார் நாகேந்திரனை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சாத்தூரில் நயினார் நாகேந்திரனை ஆதரித்து நிதின் நபின் ரோடு ஷோவில் ஈடுபட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com