மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உடன் பா.ஜ.க. தமிழ்நாடு நிர்வாகிகள் ஆலோசனை

நிதின் நபின், அமித்ஷா ஆகியோரின் முன்னிலையில், தமிழக பா.ஜ.க. மையக்குழு கூட்டம் நடைபெற்றது.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உடன் பா.ஜ.க. தமிழ்நாடு நிர்வாகிகள் ஆலோசனை
Published on

புதுடெல்லி,

புதுடெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோரின் முன்னிலையில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல். முருகன், முன்னாள் அமைச்சர், மாநில நிர்வாகிகள் மற்றும் முக்கியக் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

மத்திய உள்துறை மந்திரி தலைமையில் தமிழக பாஜகவின் மையக் குழு ஆலோசனைக் கூட்டம்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கான மையக் குழு ஆலோசனைக் கூட்டம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் பாரத ஜனதா கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் ஆகியோரின் வழிகாட்டுதலிலும் நேற்றைய தினம் புது டெல்லியில் நடைபெற்றது.

இந்த முக்கிய மையக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் இணைந்து பங்கேற்றோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com