மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் பலம் 3 ஆக குறைந்துள்ளது
மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு
Published on

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மேல்சபை எம்.பி.க்கள் ராகவ் சத்தா, அசோக் மித்தல், சந்தீப் பாடக், ஹர்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம் சஹ்னி மற்றும் ஸ்வாதி மாலிவால் ஆகிய 7 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர். இந்த 7 எம்.பி.க்களும் தங்களை பா.ஜனதா எம்.பி.க்களாக கருத வேண்டும் என்று மேல்சபை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் கடந்த வெள்ளிக்கிழமை மனு அளித்திருந்தனர். கட்சி மாறிய 7 எம்.பி.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மேல்சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான சி.பி. ராதாகிருஷ்ணனிடம் ஆம் ஆத்மி கட்சி குழு தலைவர் சஞ்சய் சிங் மனு அனுப்பினார்.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.பி.க்கள் பா.ஜனதாவுடன் இணைவதை மேல்சபை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் பாஜகவின் பலம் ராஜ்யசபாவில் 113 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் பலம் 3 ஆக குறைந்துள்ளது

X

Daily Thanthi
www.dailythanthi.com