டெல்லி பூ மார்க்கெட்டில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது...!

டெல்லி பூ மார்க்கெட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த வெடிகுண்டு பை கண்டுபிடிக்கப்பட்டதை அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
டெல்லி பூ மார்க்கெட்டில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது...!
Published on

புதுடெல்லி,

கிழக்கு டெல்லியின் காஜிபூரில் உள்ள ஒரு பூ மார்க்கெட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் மர்ம வெடிகுண்டு பை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அந்த பகுதி இன்று சுற்றிவளைக்கப்பட்டது.

இதனையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு படை, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் (என்எஸ்ஜி) சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் வெடிகுண்டை வெடிக்கச் செய்யப்பட்டு பயங்கர அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு வெற்றிகரமாக செயல்பட்டது.

இதனிடையே டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா, காஜிபூர் மண்டியில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு, மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு (ஐஇடி) என்று செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதி செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com