

புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மாவட்ட கோர்ட்டுகள் உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் சம்ப வங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் இது வெறும் புரளி என சோதனையில் தெரியவந்தது. இந்நிலையில் டெல்லியில் 3 பள்ளிகளுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.
இதை தொடர்ந்து பள்ளி நிர்வாகங்கள் போலீசில் புகார் அளித்தன. இதை யடுத்து, பள்ளி நிர்வாகம் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோருக்கு தெரிவித்தது. மேலும் ஏற்கனவே வந்திருந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் பள்ளி வளாகங்களில் சோதனை நடத்தினர். ஆனால் இதில் சந்தேகத்திற்கு ரிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இது புரளி என்ன தெரியவந்தது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.